தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாசிக் அருகே தீப்பிடித்து எரிந்த பேருந்து ... 14 பேர் பலி - nandur naka bus fire incident

மஹராஷ்டிரா மாநிலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதில் பயணம் செய்த 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

நாசிக் அருகே  தீப்பிடித்து எரிந்த பேருந்து ... 14 பேர் பலி
நாசிக் அருகே தீப்பிடித்து எரிந்த பேருந்து ... 14 பேர் பலி

By

Published : Oct 8, 2022, 7:46 AM IST

Updated : Oct 8, 2022, 11:09 AM IST

மஹராஷ்டிரா :யவுத்தமாலில் இருந்து நாசிக் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 30 பேர் இருந்தனர். நாசிக் அவுரங்காபாத் சாலையில் ஹோட்டல் மிர்சி சவுக் அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது.

அப்போது டீசல் டேங்க் வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மற்றொரு நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

நாசிக் அருகே தீப்பிடித்து எரிந்த பேருந்து ... 14 பேர் பலி

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை சுமார் 4 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : உத்தரகண்ட் நிலச்சரிவு...26 உடல்கள் மீட்பு

Last Updated : Oct 8, 2022, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details