போபால் :நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அவசியம் குறித்து வலியுறுத்திய பிரதமர் மோடி, அனைவருக்குமான அரசியலமைப்பு சமத்துவத்தை கொண்டு இருக்கும் அதேவேளையில் நாடு இரண்டு சட்டகளை கொண்டு இயங்க முடியாது என்று தெரிவித்தார்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் சென்ற பிரதமர் மோடி, கமலாபடி ரயில் நிலையத்தில் மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் 5 வந்தே பாரத் ரயில்கள் சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இஸ்லாம் மத்தத்தில் உள்ள முத்தலாக் குறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும் எகிப்து, இந்தோனேஷியா, கத்தார், ஜோர்டான், சிரியா, வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் முத்தலாக் என்பது நடைமுறையில் இல்லாத ஒன்றாக இருப்பதாக கூறினார். இரண்டு வெவ்வேறு சட்ட விதிமுறைகள் இருந்தால் குடும்பம் செயல்படுமா என்று தெரிவித்த பிரதமர் மோடி அதேபோல் நாடு எப்படிய இயங்கும் என்று கேள்வி எழுப்பினார்.
அரசியலைமைப்பு அனைவருக்குமான சமத்துவத்தை உறுதி செய்வதாகவும் அதில் இரண்டு சட்டங்களை கொண்டு இயங்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் சிலர் தங்களது சுயநலத்திற்காக சிலக் குழுக்களை தூண்டு விடுவதாக எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி சாடினார்.