காந்திநகர்:குஜராத் சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபா சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் காந்தி நகர் தெற்கு தொகுதியில் வாக்களித்தார். ஹிராபாவுக்கு தற்போது 100 வயதாகும்.
குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக அகமதாபாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திலிருந்து நேராகக் காந்தி நகர் ரைசன் என்ற பகுதிக்குச் சென்று தாய் ஹீராபாவை சந்தித்தார். பிரதமர் மோடி தனது தாயுடன் 30 நிமிடங்கள் செலவழித்து, தேநீர் பருகிவிட்டு கமலம் என்ற பகுதிக்குச் சென்றடைந்தார்.
அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநில தலைவர் சிஆர் பாட்டீல் மற்றும் பலரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் வாக்களித்த பிரதமர் மோடியின் 100 வயது தாய் ஈடிவி பாரத்திற்குப் பிரதமர் மோடியின் சகோதரர் சோமாபாய் மோடி அளித்த பிரத்யேக பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்தபோது குடும்பத்துடன் கலந்துரையாடிவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்காக அதிகபட்சமாக வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், குஜராத்தின் வளர்ச்சி தொடர பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டியது அவசியம் என்றார்.
இதையும் படிங்க: 'விசாரணைக்கு ஆஜராக முடியாது' சிபிஐக்கு தெலங்கானா முதலமைச்சர் மகள் கடிதம்