தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Heeraben Modi: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவு - ஹீராபென் பிறந்த ஊர்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவு
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவு

By

Published : Dec 30, 2022, 6:20 AM IST

Updated : Dec 30, 2022, 7:35 AM IST

அகமதாபாத்:பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (டிசம்பர் 30) உயிரிழந்தார். 100 வயதாகும் ஹீராபென் குஜராத் சட்டப் பேரவை தேர்தலின்போது கடைசியாக வாக்களித்தார். பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4ஆம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றிருந்தார்.

இவரது மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. என் அம்மாவிடம், ஒரு துறவியின் வாழ்க்கை பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.

அவருடைய 100ஆவது பிறந்தநாளில் அவரைச் சந்தித்தபோது, என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார். அது எப்போதும் நினைவில் இருக்கும். "புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள்" என்றார். அதுபோலவே, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்கிறோம், தூய்மையுடன் வாழ்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஹிராபா என்றும் அழைக்கப்படும் ஹீராபென் மோடி, பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகர் நகருக்கு அருகிலுள்ள ரைசன் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த வாரம் முதலே அவரது உடல் நிலை மோசமான நிலையில், டிசம்பர் 28ஆம் தேதி அகமதாபாத்தில் யுஎன் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:தலாய் லாமாவை உளவு பார்த்ததாக புகார் - பீகாரில் சீனப் பெண் கைது

Last Updated : Dec 30, 2022, 7:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details