காந்திநகர்:குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் நேரடி பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், சுரேந்திரநகரில் தேர்தல் பரப்புரையில் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், "காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரத்தில் வளர்ச்சி பற்றி பேசுவதற்கு பதிலாக, என்னுடைய அந்தஸ்து பற்றி பேசி வருகிறார்கள். அவர்களைப்போல நான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல.
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். ஒரு வேலைக்காரன் மட்டுமே. எனக்கு எந்த அந்தஸ்தும் கிடையாது. இந்த அந்தஸ்து விளையாட்டை விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சி பற்றி பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்போது ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இப்போது மீண்டும் ஆட்சியை பிடிக்க நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு நிலக்கடலைக்கும் பருத்தி விதைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது.