கவுகாத்தி : வடகிழக்கு மாநிலங்களில் கட்டமைக்கப்பட்ட முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி அசாம் தலைநகர் கவுகாத்திக்குச் சென்றார். ஆயிரத்து 123 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்பட்ட முதல் எய்ம்ஸ் மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது. வசந்த கால விழாவின் முதல் நாளான "ரொங்காலி பிகு" பண்டிகையை முன்னிட்டு 14 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட மற்றும் முடிவு பெற்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார், பிரதமர் மோடி.
முன்னதாக விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு, அசாம் ஆளுநர் குலாப் சந்த் கடாரியா, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நல்பரி, நாகோன், கொக்ராஜ்கர் பகுதிகளில் 3 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.