தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு நாளை கர்நாடகா பயணம்! - ஐஐடியின் புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார்

குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை(செப்.26) கர்நாடகா செல்கிறார். அங்கு புகழ்பெற்ற தசரா திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார்.

President
President

By

Published : Sep 25, 2022, 5:30 PM IST

டெல்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மூன்று நாட்கள் பயணமாக நாளை(செப்.26) கர்நாடகா செல்கிறார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முர்மு முதல்முறையாக ஒரு மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செல்கிறார். கர்நாடகாவில் நாளை முதல் 28ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

நாளை மைசூரில் உள்ள சாமுண்டி மலைக்கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். பிறகு புகழ்பெற்ற தசரா திருவிழாவை முர்மு தொடங்கி வைக்கிறார். பின்னர் தார்வாட்டில் உள்ள ஐஐடியின் புதிய வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

நாளை மறுநாள் (செப்.27) பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தியை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைக்கிறார். அதோடு தேசிய வைராலஜி நிறுவனத்தின் தெற்கு மண்டல கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். அதே நாளில், செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவிலும் முர்மு பங்கேற்க இருக்கிறார்.

இதையும் படிங்க:சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்


ABOUT THE AUTHOR

...view details