தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

3 ஆண்டுகளில் 7.4 கோடி ஊரக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு - திரௌபதி முர்மு - Swachh Bharat Diwas in New Delhi

இந்தியாவில் 2019ஆம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டபோது 3.23 கோடி ஊரக வீடுகள் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் விநியோகத்தைப் பெற்றிருந்தன. கடந்த மூன்று ஆண்டுகளில் இது 10.27 கோடியை எட்டி உள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு h பெருமிதம் தெரிவித்தார்.

President Droupadi Murmu graced the Swachh Bharat Diwas celebrations
President Droupadi Murmu graced the Swachh Bharat Diwas celebrations

By

Published : Oct 3, 2022, 6:56 AM IST

டெல்லியில் ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தூய்மை இந்தியா தின நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். அப்போது குடியரசு தலைவர் பேசுகையில், 2014ஆம் ஆண்டு ஊரகத் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்ட பின் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டன, சுமார் 60 கோடி மக்களுக்குத் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது.

ஐநாவின் நீடித்த வளர்ச்சி இலக்கு எண் 6-க்கான காலவரம்பு 2030. ஆனால், இந்த இயக்கத்தின் மூலமாக 11 ஆண்டுகள் முன்னதாகவே இலக்கை இந்தியா எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தூய்மையைப் போலவே மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் தரமான குடிநீர் வழங்கும் இலக்கை எட்டவும் பாடுபட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் முறையான, தரமான குடிநீர் வழங்குவதை ஜல் சக்தி இயக்கம் இலக்காகக் கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜல்ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டபோது 3.23 கோடி ஊரக வீடுகள் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் விநியோகத்தைப் பெற்றிருந்தன. கடந்த மூன்று ஆண்டுகளில் இது 10.27 கோடியை எட்டி உள்ளது. அமிர்த காலத்தில் நாம் நுழையும் தருணத்தில் சுகாதாரமான தூய்மையான தற்சார்பு கொண்ட இந்தியாவைக் கட்டமைப்பது நமது தீர்மானமாக இருக்க வேண்டும்.

பெருமளவிலான மக்கள்தொகைக்கு அடிப்படை வசதிகளை வழங்க நாம் மிகப்பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த இலக்கை எட்டுவதற்கு நவீன தொழில்நுட்பமும் ஏராளமான நிதியும் தேவைப்படும். ஆனால் நமது அரசியல் தலைமை, விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியாலும் அனைத்துக்கும் மேலாக விழிப்புணர்வு மிக்க குடிமக்களாலும் இந்தியாவை வளர்ச்சி அடைந்த தற்சார்புள்ள நாடாக வெற்றிகரமாக மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சித்து மூஸ்வாலா கொலை வழக்கு

ABOUT THE AUTHOR

...view details