தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 17, 2020, 4:41 PM IST

ETV Bharat / bharat

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம்!

டெல்லி : நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, 2022ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

new parliament building
new parliament building

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான மூன்று கிலோமீட்டர் தொலைவில் மத்திய அரசு ’சென்ட்ரல் விஸ்டா’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றதிற்கு புதிய கட்டடம், மத்திய அமைச்சகங்களுக்கான கட்டடம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட கட்டடங்கள் அமைய உள்ளன.

தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடம் இடப்பற்றாக்குறையில் இயங்கிவருவதாலும் அது நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் இல்லை என்பதாலும் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. முக்கோண வடிவில் அமையவுள்ள இந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் சுமார் 1,200 பேர் வரை அமரலாம்.

இத்திட்டதிற்கான வடிவமைப்பு ஒப்பந்தத்தை குஜராத்தின் ஹெச்.சி.பி. டிசனைன்ஸ் நிறுவனத்திற்கு சென்றுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, 2022ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, டெல்லியில் காற்று மாசு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கட்டுமானப் பணிகளின்போது எழும் தூசி, காற்றில் பரவாமல் இருக்க கட்டுமான இடங்களைச் சுற்றி வலைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற வளாகத்திற்குச் சென்று, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். புதிய கட்டடங்களைக் கட்ட தற்போது முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ”மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்க பலரும் விருப்பம்”

ABOUT THE AUTHOR

...view details