டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பெருமளவில் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகின்றன.
முன்னதாக, இந்த இரண்டுமே கர்ப்பிணிகளிடம் செலுத்திப் பரிசோதிக்கப்படவில்லை என்பதால், மத்திய அரசு இவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை பரிந்துரை செய்யாமல் இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து நேற்று(ஜூன் 25) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஐ.சி.எம்.ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவாவிடம், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் எனக் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அப்போது பதிலளித்த பல்ராம் பார்கவா, 'கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடும் முடிவை எடுப்பதற்கு முன்பு ஐ.சி.எம்.ஆர் ஆய்வகத்தில் சோதனை செய்ததில், கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றும், அது வழங்கப்பட வேண்டும் என்பதையும் நிரூபித்தோம். இதனால், இனி கர்ப்பிணிகளுக்குக் கரோனா தடுப்பூசியை வழங்கலாம் என சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஆனால், போதுமான தகவல்கள் கிடைக்கும் வரை குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி தேவையா என்பது இன்னும் விவாதத்திற்குரிய கேள்வியே.