டெல்லி:நாட்டின் தலைநகர் டெல்லியில் 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சரியாக, இன்று இரவு 10.20 மணிக்கு டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு வந்தனர். உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையத்தில் இருந்து கிடைத்துள்ள தகவலின் படி, ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலிருந்து 133 கி.மீ. தென்கிழக்கு பகுதிகளில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.
அதேபோல், பாகிஸ்தானிலும் 6.8 ரிக்டர் அளவுகோல் என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.