தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மார்ச் 29இல் முழு அடைப்பு: புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் ஆதரவு - திமுக- காங்கிரஸ்

புதுச்சேரியில் திமுக -காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மார்ச் 28இல் போராட்டமும், மார்ச் 29ஆம் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

pondy
pondy

By

Published : Mar 26, 2022, 6:11 PM IST

புதுச்சேரி:அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில், நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளான, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய முஸ்லிம் லீக் மற்றும் மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முதலியார்பேட்டையில் உள்ள சிபிஐ கட்சித் தலைமை அலுவலகத்தில், திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், சிபிஐ மாநில செயலாளர் சலீம், சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம், விசிக மாநில அமைப்பாளர் தேவா பொழிலன், மதிமுக கபிரியேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர் சிவா, "வரும் 28, 29 ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. அதில், புதுச்சேரியில் 28ஆம் தேதி போராட்டமாகவும், 29ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டமும் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு தேவையான நிதியை கொடுக்காமல் புறக்கணிப்பது, மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, இந்த முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details