இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "கரோனா நோய்த் தொற்று புதுச்சேரியில் குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கை 94 விழுக்காடாக உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தனியார், அரசு உதவிப் பெறும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுவை தனி தேர்வாளர்கள் மீண்டும் தேர்வெழுத ஒப்புதல் கோரி நாராயணசாமி கடிதம்! - 10ஆம் வகுப்பு தனி தேர்வாளர்கள்
புதுச்சேரி: 10ஆம் வகுப்பு தனி தேர்வாளர்கள் மீண்டும் தேர்வெழுத ஒப்புதல் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருப்பதாக, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
தனியார் பேருந்துகள், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் அதற்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசு நிர்வாகத்துக்கு துணை நிலை ஆளுநர் தொல்லை கொடுக்கிறார்.
10ஆம் வகுப்பு தனி தேர்வாளர்களுக்கு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பயிற்சி அளிக்க முடியவில்லை. புதுச்சேரியில் ஆயிரம் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது. புதுச்சேரி தனி தேர்வாளர்களுக்கு துணை தேர்வு வைக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன்" என்று தெரிவித்தார்.