தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி முதலமைச்சர் பதவி விலக எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி பதவி விலக வேண்டும் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டும்
பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டும்

By

Published : Aug 10, 2022, 1:27 PM IST

புதுச்சேரி:ஒன்றிய அரசு புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஆக.10) துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்தும், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாதது, எதிர்ப்பு தெரிவித்தும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில் குமார், நாக தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பந்த் உள்ளிட்டோர் பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டும்

பின்னர் துணைநிலை ஆளுநர் உரையை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா பேசுகையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யாதது, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாதது, புதுச்சேரிக்கு போதிய நிதி பெற்றுத் தராமல், மாநில வளர்ச்சி தடையாக அரசியல் செய்துகொண்டிருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலகக்கோரி வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கூட்டணியிலிருந்தபோதும் புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும், பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போன்று, கூட்டணியிலிருந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:விலைவாசி உயர்வு - காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரை...

ABOUT THE AUTHOR

...view details