புதுச்சேரி:வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கனமழையால் குளம்போல் காட்சியளிக்கும் புதுச்சேரி சாலைகள் - புதுச்சேரியில் விடியவிடிய கனமழை
புதுச்சேரியில் பெய்துவரும் கனமழையால் சாலைகள் குளம்போல் காட்சியளிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் கூடுதல் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரியில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. கனமழையால் புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளான வெங்கட்டாநகர், கிருஷ்ண நகர் உள்ளிட்ட பகுதிகள், நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் ஓடிய மழைநீர் வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளது. அதுமட்டுமின்றி, சாலைகளில் குளம்போல தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகினர்.