ஹைதரபாத்:5 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 64,523 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 17 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 35,000 வாக்குச் சாவடிகளில் இணையதளம் மூலம் நேரலையில் கண்காணிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக மாநிலம் முழுவதும் 2,533 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில், 2,281 ஆண் வேட்பாளர்கள், 252 பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். இந்த தேர்தலில் 22 லட்சம் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சோதனை சாவடிகளில் நடைபெற்ற சோதனையில் கடந்த 2018ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்தியப் பிரதேசத் தலைமைத் தேர்தல் அதிகாரி அனுபன் ராஜன் தெரிவிக்கும் போது, "மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த பின்பு மாநிலங்கள் முழுவதும் 2 லட்சத்து 85 ஆயிரம் ஆயுதங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 800க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைத்துத் தொடர் சோதனை செய்ததில் 331 கோடி மதிப்பிலான பணம் மதுபானம் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 38.49 கோடி பணம், 62.9 கோடி மதுபானம், 92.74 விலை உயர்ந்த பொருட்கள், 121.61 கோடி ஆவணங்கள் மற்றும் 17.2 இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.