ஹைதராபாத்:ஹைதராபாத், பஞ்சாராஸ் ஹில்ஸ் எனும் இடத்தில் உள்ள ஒரு பப்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்ட்டி செய்ததாக 144 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி அதிக நேரம் பார் திறந்து இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த பப்பில் கைது செய்யப்பட்டவர்களில் 33 பெண்களும், சில முக்கிய பிரமுகர்களும் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களும் இருந்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி செயல்பட்டதாக அந்த பப்பின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.