தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலீசார் கலாசார காவலர்களாக மாறவேண்டாம் - உச்ச நீதிமன்றம் - Delhi Supreme court

மத்திய தொழில்படை வீரர் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணியின் போது காவலர்கள் கலாசார காவலர்களாக மாறவேண்டாம் எனத் தெரிவித்தது.

காவலர்
காவலர்

By

Published : Dec 20, 2022, 8:13 PM IST

Updated : Dec 20, 2022, 9:26 PM IST

டெல்லி: பாதுகாப்புப் பணியின்போது தம்பதியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பணி நீக்கம் செய்யப்பட்ட மத்திய தொழில்படை காவலரின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவலர்கள் பணியின்போது, கலாசார காவலர்களாக மாறவேண்டாம் எனத் தெரிவித்தது.

கடந்த 2001ஆம் ஆண்டு, குஜராத் மாநிலம், வதோதராவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய தொழில்படை காவலர், இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை நிறுத்தி தகாத முறையில் ஈடுபட்டதாகவும், நிலையைச் சீர் செய்ய கையில் இருந்த கடிகாரத்தை காவலருக்கு வழங்கிவிட்டு தம்பதி தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தம்பதி அளித்தப் புகாரில், காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கத்தை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் காவலர் வழக்குத் தொடர்ந்த நிலையில், தம்பதி அளித்த வாக்குமூலம் முரணாக இருப்பதாகக் கூறி குஜராத் நீதிமன்றம், காவலருக்கு சாதகமாக தீர்ப்பளித்து மீண்டும் பணி ஆணை வழங்க உத்தரவிட்டது.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய தொழில்படை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, மகேஸ்வரி அமர்வு, பணியின்போது உடை மற்றும் உடைமைகள் காண்பிக்க கட்டாயப்படுத்தி தங்கள் தார்மீகப் பணியில் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என்றும்; போலீசார் கலாசார காவலர்களாக மாறவேண்டாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, காவலருக்கு மீண்டும் பணி வழங்கத் தடை விதித்தனர்.

இதையும் படிங்க:வீடு புகுந்து பெண் கடத்தல் - பதறிய பெற்றோருக்கு டிவிஸ்ட் கொடுத்த மகள்

Last Updated : Dec 20, 2022, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details