மும்பை:மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பிஎம் வானி (PM-WANI) (வைஃபை அணுகல் நெட்வொர்க் இன்டர்பேஸ்) திட்டம் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் நாடு முழுவதும் வைஃபை கிடைப்பதை கணிசமாக மேம்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
"மத்திய அமைச்சரவையால் நேற்று (டிச. 09) ஒப்புதல் அளிக்கப்பட்ட பிஎம் வானி (PM-WANI Wi-Fi ) வைஃபை திட்டம் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவில் வைஃபை கிடைப்பதை கணிசமாக மேம்படுத்தும். மேலும் இது 'வணிகம் மற்றும் வாழ்வியலை எளிதாக்கும்'" என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
இந்தப் பொது வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் பிராட்பேண்ட் (அகன்ற அலைவரிசை) இணையத்தை வழங்குவதற்கான உரிம கட்டணம் ஏதும் இருக்காது.