டெல்லி: நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து இடங்களிலும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையடுத்து, மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்சிஜன் உருளைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கரோனா பாதிக்கப்பட்ட மக்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, மக்களின் நலனை கருதி பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 16) கூறுகையில் ’’கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்கள் அனைவரும் மிக கவனமாக இருக்கு வேண்டும். எனவே, மக்களின் நலனை கருதி நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.