டெல்லி: இந்தியாவை 'பாரத்' என்று குறிப்பிட்ட விவகாரம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.9) G20 மாநாட்டில் அமரும் இடத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் 'பாரத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் I.N.D.I.A கூட்டணியிடம் எதிர்ப்பை எற்படுத்தியுள்ளது.
முன்னாள் எம்.பியும் சி.பி.எம் மத்திய குழு உறுப்பினருமான ஹன்னன் மொல்லா ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "பா.ஜ.க அரசு சர்வாதிகாரமாக மாறிவிட்டது. மேலும் என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்துவிட்டனர். இந்தியாவை 'பாரத்' என்று குறிப்பிட்ட விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில் G20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் பலகையில் 'பாரத்' என்று பயன்டுத்திய செயல் பா.ஜ.க அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் கலீக் கூறும் போது, "G20 மாநாட்டில் பெயர் பலகை விவகாரம் ஆளும் பாஜக கேலிக்கூத்துகளில் ஒன்று. உலக நாடுகள் அனைத்தும் இந்தியா என்றே தெரிந்துள்ளன. அரசியலமைப்பிலும் இந்தியா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விகளை மறைக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:G20 summit: கோலாகலமாக தொடங்கும் ஜி20 மாநாடு! உலக தலைவர்கள் இந்தியா வருகை!