டெல்லி:உலக ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இதில், கலந்துகொள்ள 115-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஒலிம்பிக் போட்டி கடந்தாண்டு நடைபெறவிருந்த நிலையில், கரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி ஜூலை 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு காணொலி வாயிலாக உரையாடவுள்ளார்.
இதையும் படிங்க:ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தைவிட பாதுகாப்பு முக்கியம்’ - சீகோ ஹாஷிமோடோ