டெல்லி: இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிதி ஆயோகின் 7ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. மத்திய/மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்திற்கு இந்த கூட்டம் வழிவகுக்கும். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார்.
இந்த கூட்டத்தில் மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கை- பள்ளிக்கல்வியின் அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை- உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.