தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அற்புதமான தீபாவளியை கொண்டாடுங்கள் - பிரதமர் நரேந்திர மோடி - Prime Minister Narendra Modi on Diwali

தீபத் திருநாளான தீபாவளியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi wishes people on Diwali
PM Modi wishes people on Diwali

By

Published : Oct 24, 2022, 7:52 AM IST

டெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி என்பது ஒளியையும், வண்ணங்களையும் தொடர்புபடுத்துவது. இந்த மங்கலகரமான பண்டிகையானது, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், சிறப்பான வாழ்வையும் மேம்படுத்தட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒரு அற்புதமான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களையத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் லட்சுமி தேவியை வணங்கி, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ பிரார்த்தனை செய்கிறார்கள். தீபாவளியின் ஒளி நம் அகம் மற்றும் புற அறியாமை இருளை அகற்றும் ஞானத்தைக் குறிக்கிறது. ஒரு தீபத்தைப் போல நம் வாழ்வில் ஆற்றலும் ஒளியும் பரவட்டும். பின்தங்கியவர்களுக்கு உதவும் மனப்பான்மை மக்களின் மனதில் ஆழமாக வளரட்டும், மேலும் நாம் அனைவரும் நமது உதயம் மற்றும் லாபம் என்னும் பாரம்பரியத்தைத் தொடர்வோம் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தீபாவளி நாளில் உங்கள் ராசிக்கான பலன்கள் எப்படி..?

ABOUT THE AUTHOR

...view details