மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள் இன்று (ஜன 17) தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. அரசியல் தலைவர்கள் அவரது உருவசிலைக்கும், புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
எம்ஜிஆரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட்! - pm modi twitter
டெல்லி: எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை பாராட்டி பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் எம்ஜிஆரை பாராட்டி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
அந்தப் பதிவில், "பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்" எனக் குறிப்பிட்டிருந்தார்