தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம்: ரூ.700 கோடியை வங்கிக் கணக்கில் போட்ட பிரதமர் - பிரதமர் மோடி

ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தில் திரிபுராவின் 1.47 லட்ச பயனாளிகளின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ஏறத்தாழ 700 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, pm modi
பிரதமர் மோடி

By

Published : Nov 14, 2021, 4:48 PM IST

டெல்லி: திரிபுரா மாநிலத்தில் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் என்னும் ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PMAY-G) திட்டத்தின் பயனாளிகளுடைய வங்கிக் கணக்கிற்கு முதல் தவணை செலுத்தும் நிகழ்வை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில், ஏறத்தாழ 700 கோடி ரூபாய் திரிபுராவைச் சேர்ந்த 1.47 லட்ச பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, " இன்று, திரிபுரா உள்பட வடகிழக்கு பகுதிகள் அனைத்தும் மாற்றத்திற்கான சாட்சிகளாக மாறியுள்ளன. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் முதல் தவணை பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், திரிபுராவின் கனவுகளுக்கு புதிய மன உறுதியை அளித்துள்ளது.

வடகிழக்கில் ஏற்படும் மாற்றம்

பிப்லாப் தேப்பிற்கும், அவர் தலைமையிலான திரிபுரா அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், அரசின் கலாசாரங்களை, பழைய பாணியிலான அரசு அமைப்புகளை குறைந்த காலத்தில் மாற்றியமைத்துள்ளனர். பிப்லாப்பின் இளமையான ஆற்றலை இன்று திரிபுரா முழுவதும் பார்க்க முடிகிறது. அனைத்து வசதிகளையும் திரிபுராவின் ஏழைகளிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் பிரித்து வைத்திருந்த மனநிலை இனிமேல் இங்கு இருக்காது.

இரட்டை என்ஜீன் பொறுத்தப்பட்ட அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக உத்வேகத்துடனும், நேர்மையோடும் பணியாற்றி வருகின்றனர். அகர்தலாவும் (திரிபுரா தலைநகர்) டெல்லியும் இணைந்து திரிபுரா வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டுவரும்" என்றார்.

இதையும் படிங்க: 26 Maoists killed: மாவோயிஸ்ட் முக்கியத் தலைவரும் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details