டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று (மார்ச் 7) உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடவுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னெட் ஞாயிற்றுக்கிழமையன்று உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உலக தலைவர்களான துருக்கி அதிபர் எர்துகான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் மாக்ரோன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.