ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காகப் பிரதமர் மோடி இன்று (ஜன.2) காலை 11 மணிக்குக் காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
சம்பல்பூர் ஐஐஎம் கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் - இந்திய மேலாண்மை நிறுவனம்
டெல்லி: சம்பல்பூர் ஐஐஎம் கட்டடத்திற்குப் பிரதமர் மோடி இன்று(ஜனவரி 2) அடிக்கல் நாட்டுகிறார்.
PM Modi
இந்த நிகழ்ச்சியில், ஒடிசா ஆளுநர் கணேஷி லால் மற்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் அலுவலர்கள், தொழில்துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சம்பல்பூர் ஐஐஎம் ஆசிரியர்கள் உள்பட 5000-க்கும் மேற்பட்டோர் காணொலி மூலம் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.