டெல்லி:வரும் (ஜூன்) 18ஆம் தேதி 26 மாநிலங்களில் உள்ள 111 பயிற்சி மையங்களில் கரோனா முன்களப் பணியாளர்களுக்கான 'சிறப்பு பயிற்சி படிப்பு' திட்டத்தை காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.
இத்திட்டம், நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்களப் பணியாளர்களின் திறன்களை மேம்பாடுத்தும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது. இப்பயிற்சித் திட்டத்தில் ஆறு வேலைத்திட்டங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ரூ.276 கேடி ஒதுக்கீடு
வீட்டு பராமரிப்பு உதவி, அடிப்படை பராமரிப்பு உதவி, மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு உதவி, அவசர பராமரிப்பு உதவி, பரிசோதனை மாதிரி சேகரிப்பு உதவி, மருத்துவ உபகரணங்களை கையாளும் திறன் உதவி ஆகியவை இதில் அடங்கும்.
இச்சிறப்பு திட்டம், பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா 3.0 திட்டத்தின்கீழ் ரூ.276 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், தற்போது மற்றும் எதிர்காலத்தில் சுகாதாரத்துறையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, திறமையான மருத்துவரல்லாத சுகாதார பணியாளர்களை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’இன்னும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தராமல் இழுத்தடிக்கிறார்கள்...’ - நொந்துகொள்ளும் ப.சிதம்பரம்!