தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாரணாசி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி! - வாரணாசி

தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, அங்கு தேவ் தீபாவளி பண்டிகையில் கலந்துகொள்கிறார். காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் வழிபாடு நடத்துகிறார்.

PM Modi to inaugurate widened NH stretch PM Modi Dev Deepawali Narendra Modi Prime Minister Narendra Modi Varanasi தேவ் தீபாவளி வாரணாசி நரேந்திர மோடி
PM Modi to inaugurate widened NH stretch PM Modi Dev Deepawali Narendra Modi Prime Minister Narendra Modi Varanasi தேவ் தீபாவளி வாரணாசி நரேந்திர மோடி

By

Published : Nov 30, 2020, 6:57 AM IST

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.30) வாரணாசி செல்கிறார். அங்கு அவர் சாலை உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிக்கு 9 மாதங்களுக்கு பின்னர் செல்கிறார். மதியம் 2 மணிக்கு வாரணாசி செல்லும் பிரதமர் மோடிக்கு தேவ் தீபாவளி பண்டிகையில் கலந்துகொள்கிறார்.

அலகாபாத்- வாரணாசி வரை ரூ.2,447 கோடியில் விரிவாக்கப்பட்ட சாலையையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். மேலும் கார்த்திகை பூர்ணிமா தினத்தை முன்னிட்டு வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தீபம் ஏற்றுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் விழாவில் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர்.

இதையும் படிங்க: கங்கை தோன்றும் முன்னே உருவான குளம்!

ABOUT THE AUTHOR

...view details