தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாரணாசியில் சர்வதேச மாநாட்டு மையம்! - நரேந்திர மோடி

வாரணாசியில் சர்வதேச மாநாட்டு மையத்தினை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 15) திறந்துவைக்கிறார்.

PM Modi
PM Modi

By

Published : Jul 14, 2021, 1:38 PM IST

Updated : Jul 14, 2021, 3:36 PM IST

டெல்லி : தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச மாநாட்டு மையத்தினை வியாழக்கிழமை திறந்துவைக்கிறார்.

நாட்டின் மிக பழமையான நகரங்களிலும் ஒன்றாக காசி திகழ்கிறது. இங்கு சர்வதேச மாநாட்டு மையம் ஒன்றினை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.

இந்த சர்வதேச மாநாட்டு மையத்தில் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேலும் மையத்தின் மேற்கூரையும் சிவலிங்க வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டடத்தை சுற்றி எல்இடி விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்கை தோன்றும் முன்னே உருவான குளம்!

வாரணாசியில் உள்ள சிக்ரா நகரில் இரு மாடி கட்டடமாக இது கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்கிறார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ரூ.1500 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதில் சர்வதேச மாநாட்டு மையத்தின் கட்டடமும் ஒன்று என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : ரிக்‌ஷா ஓட்டுநர் மகளுக்கு திருமணம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

Last Updated : Jul 14, 2021, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details