தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் முதல் பொம்மை கண்காட்சி - பிரதமர் இன்று தொடங்கிவைப்பு! - தற்சார்பு இந்தியா திட்டம்

டெல்லி: இந்தியாவின் முதலாவது பொம்மை கண்காட்சி 2021-யை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 27) தொடங்கிவைக்கிறார்.

இந்திய பொம்மை கண்காட்சி 2021: தொடங்கி வைக்கும் பிரதமர்!
இந்திய பொம்மை கண்காட்சி 2021: தொடங்கி வைக்கும் பிரதமர்!

By

Published : Feb 27, 2021, 10:31 AM IST

பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம், உள்நாட்டு உற்பத்தியை பெருக்க பெரும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் பொம்மை சந்தையை வளர்க்க இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் முதல் பொம்மை கண்காட்சியானது இன்று (பிப். 27) முதல் தொடங்கி, மார்ச் 2ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்த பொம்மை கண்காட்சியானது டிஜிட்டல் முறையில் அணுகக்கூடிய முதல் கண்காட்சி மற்றும் தளமாகும்.

இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களிடமிருந்து பலவிதமான பொம்மைகளை ஆராய்ந்து வாங்குவதற்கு கண்காட்சி பயனுள்ளதாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...என்னை குறித்து அவதூறு பரப்பினால்... எச்சரிக்கை விடுத்த பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ராஜேஸ் தாஸ்!

ABOUT THE AUTHOR

...view details