தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி திரும்பினார் மோடி; உற்சாக வரவேற்பு! - டெல்லி திரும்பினார் மோடி

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று (செப். 26) டெல்லி திரும்பிய நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Narendra Modi
Narendra Modi

By

Published : Sep 26, 2021, 4:56 PM IST

Updated : Sep 26, 2021, 5:09 PM IST

டெல்லி: மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 22ஆம் தேதி அமெரிக்கா சென்றார். இந்த சுற்றுப்பயணத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், நாற்கரக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு (குவாட் நாடுகள்), மூன்று நாடுகளுடனான இருதரப்புச் சந்திப்பு, ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தொடர் ஆகியவற்றிலும் மோடி பங்கேற்றார்.

புதிய கண்ணோட்டத்தில் இந்தியா

மூன்று நாள் பயணம் நிறைவடைந்த நிலையில், அவர் இன்று டெல்லி திரும்பினார். டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு பாஜக தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையம் வந்திருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் மோடியை வரவேற்றார். இதன்பின்னர், ஜே.பி. நட்டா பேசுகையில், "மோடியின் இந்த சுற்றுப்பயணத்திற்கு பின் உலகம் இப்போது இந்தியாவை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறது. மேலும், பிரதமர் மோடி உலக வளர்ச்சிக்கு பங்களிப்பைச் செய்துள்ளார்.

ஜே.பி. நட்டா ட்வீட்

உலகளாவிய சக்தி

பிரதமர் உலகளாவிய பிரச்னைகளை வலுவாக முன்வைத்தார். பயங்கரவாதம், அதன் விரிவாக்கம் பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்" என்றார்.

ஐக்கிய நாடு பொது சபையில் பிரதமரின் நேற்று (செப். 25) ஆற்றிய உரை குறித்து பேசிய நட்டா, " பிரதமர் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமருக்கு பழைய நட்பு இருந்தது. பயங்கரவாதம், காலநிலை மாற்றம் குறித்து விவாதிப்பதன் மூலம் பிரதமர் இந்தியாவை உலகளாவிய சக்தியாக நிறுவியுள்ளார். அனைத்து நாடுகளின் பங்கேற்புடன் ஒரு தீர்வை எவ்வாறு பெற முடியும் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

உற்சாக வரவேற்பு

அமெரிக்க அரசு ஒப்படைத்த இந்தியாவுக்குச் சொந்தமான 157 கலைப்பொருட்களை, பிரதமர் இந்தியாவிற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுகள்" எனத் தெரிவித்தார். பிரதமர் மோடி தனக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இசை கலைஞர்கள் விமான நிலையத்தில் இசை வாத்தியங்களை வாசித்து பிரதமரை வரவேற்றனர். பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பிரதமரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். பாலம் விமான நிலையத்திலிருந்து மூன்று கி.மீ தூரத்திற்கு பொதுமக்கள், தொண்டர்கள் வரவேற்பு பதாகைகளுடன் சாலையின் இருபுறங்களிலும் நின்று பிரதமரை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தும் நாடுகளை எதிர்க்க வேண்டும்'

Last Updated : Sep 26, 2021, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details