டெல்லி:ஜாலியின் வாலாபாக் படுகொலையின் 102ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1919ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜாலியன் என்னும் இடத்தில் ஆங்கிலேய ராணுவ அலுவலர் ஜெனரல் டயரின் உத்தரவின்பேரில் சுட்டுக்கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு இந்நாளில் தலைவர்கள், மக்கள் பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவுநாள்: பிரதமர் மரியாதை - பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பகுதியில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் ஏராளமான மக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும்பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்த தியாகிகள் அனைவருக்கும் எனது அஞ்சலி. அவர்களின் தைரியம், வீரம், தியாகம் ஒவ்வொரு இந்தியருக்கும் பலத்தை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.