இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கரின் 64ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அம்பேத்கர் குறித்து ட்விட்டரில் பெருமையோடு பகிர்ந்துகொண்ட மோடி, "அவரது எண்ணங்களும் லட்சியங்களும் லட்சக்கணக்கானவர்களுக்குத் தொடர்ந்து சக்தியைத் தருகின்றன. நம் நாட்டிற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்றார்.
அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், "பாபா சாகேப் அம்பேத்கரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பல தசாப்தங்களாக பட்டியலினத்தவர்களின் நலனுக்காக மோடி அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஹைதராபாத் தேர்தல்... பாஜக அசுர வளர்ச்சி: 'பாக்யா நகர்' வாக்காளர்களுக்கு யோகி நன்றி!