டெல்லி : மாநில முதலமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் இந்த ஆலோசனை காணொலி வாயிலாக நடைபெறுகிறது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஒமைக்ரான் வகை கோவிட் பரவல் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ்கள் எளிதில் பரவிவருகின்றன என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் லாவ் அகர்வால், “நாட்டில் கோவிட் பாதிப்புகள் அதிதீவிரமாக பரவிவருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பரவல் அதிகரித்து காணப்படுகிறது” என்றார்.