பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. விவசாயிகளின் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.
வேளாண் சட்டங்களை ஆதரித்து மோடி மாநிலங்களவையில் உரை?
டெல்லி: வேளாண் சட்டங்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் உரையாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது வேளாண் சட்டங்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாள்களாகவே, மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். பலமுறை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் மோடி மாநிலங்களவையில் பதிலளிப்பார் எனக் கூறப்படுகிறது.