டெல்லி: நாட்டின் விடுதலை மாதமான ஆகஸ்ட் தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முன்னேற்றங்களை குறிப்பிட்டு நாட்டு மக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “இன்று நாம் 75ஆவது சுதந்திர தினத்துக்குள் நுழைகிறோம். இத்தினத்தில் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்வுறும் பல நிகழ்வுகளை பார்த்துவருகிறோம்.
ஜிஎஸ்டி பெருக்கம் நமது பொருளாதார வலிமையை குறிக்கிறது. பி.வி. சிந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார், ஆண்கள், பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த அம்ருத் மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின்போது, 130 கோடி இந்தியர்களும் நாடு புதிய உயரங்களை எட்டுவதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து பாடுபடுவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்தில் 33 விழுக்காடு ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து ரூ.1.16 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல் 13 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாட்டிற்காக பதக்கம் வென்றது மட்டற்ற மகிழ்ச்சி - சிந்துவின் தந்தை நெகிழ்ச்சி