டெல்லி:மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் நடத்தும் கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021-ஐ, www.maritimeindiasummit.in மெய்நிகர் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.
2021 கடல்சார் இந்தியா உச்சி மாநாடு தொடக்கம்! - நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, 2021 கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை இன்று (மார்ச்2) காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
இந்த மாநாடு 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவின் கடல்சார் துறைக்கான வரைபடத்தை வடிவமைத்து, உலக கடல்சார் துறையில் இந்தியாவை முன்னணியில் திகழச் செய்வதற்காக இந்த மாநாடு பாடுபடும்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுனர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, இந்திய கடல்சார் துறையின் தொழில் வாய்ப்புகள், முதலீடுகள் குறித்து ஆராய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 நாள் உச்சி மாநாட்டில் இந்தியாவுடன் டென்மார்க்கும் கூட்டு நாடாக இணைந்துள்ளது.