காந்தி நகர்: பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 27) அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெற்ற காதி விழாவில் பங்கேற்றார். இன்று (ஆகஸ்ட் 28) புஜ் பகுதியில் கட்டப்பட்ட ஸ்மிருதி வன நினைவிடத்தை தொடங்கி வைத்தார். இந்த புஜ் ஸ்மிருதி வன நினைவிடம் 2021ஆம் ஆண்டு நிலநடுக்கத்தின் போது உயிரிழந்த 13,000 பேரின் நினைவாகவும், அதன் பின் மக்கள் உறுதி உணர்வை வெளிப்படுத்தியதை பெருமைப்படுத்தும் விதமாகவும் கட்டப்பட்டது.
குஜராத்தில் ஸ்மிருதி வன நினைவிடம்... பிரதமர் மோடி தொடங்கி வைப்பு...
குஜராத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் நினைவாகவும், அதன் பின் மக்கள் உறுதி உணர்வை வெளிப்படுத்தியதை பெருமைப்படுத்தும் விதமாகவும் கட்டப்பட்ட ஸ்மிருதி வான் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
சுமார் 470 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பபட்டுள்ள இந்த நினைவிடத்தில் நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அருங்காட்சியகம் 7 கருப்பொருட்கள் அடிப்படையில் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு பார்வையாளர்களுக்காக 50 ஆடியோ-விஷுவல் மாடல்கள், ஹாலோகிராம், இன்டராக்டிவ் ப்ரொஜெக்ஷன், விர்ச்சுவல் ரியாலிட்டி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து புஜ் பகுதியில் ரூ.4,400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதையும் படிங்க:பிரதமருடன் 7,500 பெண்கள் ஒன்றாக ராட்டை சுற்றி சாதனை