25th National Youth Festival: நாட்டின் 75ஆவது சுதந்திர தின ஆண்டையொட்டி, 25ஆவது தேசிய இளைஞர் விழா இன்றுமுதல் (ஜனவரி 12) வரும் 16ஆம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7,500 மாணவர்கள் பங்கேற்கும் இளைஞர் விழாவைத் தொடங்கிவைக்க நரேந்திர மோடி புதுச்சேரி வருகை தர இருந்தார். ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக அவரது வருகை ரத்துசெய்யப்பட்டது.
ஐந்து நாள் கொண்டாட இருந்த விழா, இரண்டு நாள்களாகக் குறைக்கப்பட்டது. மாணவர்கள் அவரவர் மாநிலங்களிலிருந்து காணொலி வாயிலாகப் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் இந்த விழாவை நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.