தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த வீரர்கள்: பிரதமர் மோடி வாழ்த்து - சுந்தர் சிங்

பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று (ஆகஸ்ட் 30)  வெற்றிபெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கும் நான்கு வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Aug 30, 2021, 10:31 AM IST

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் வட்டு எறிதல் எஃப்-56 பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதேபோல் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று (ஆகஸ்ட் 30) வெற்றிபெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கும் நான்கு வீரர்களுக்குப் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அவனி லெகாராவுக்கு வாழ்த்து

அவனி லெகாரா

அவனி லெகாராவின் அசாதாரண செயல்திறன். கடின உழைப்பால் தங்கம் வென்றதற்கு வாழ்த்துகள். இது உண்மையில் இந்திய விளையாட்டுக்கு ஒரு சிறப்பான தருணம். உங்களது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

யோகேஷ் கத்துனியா வாழ்த்து

யோகேஷ் கத்துனியா

யோகேஷ் கத்துனியாவின் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். வீட்டிற்கு அவர் வெள்ளிப் பதக்கத்தைக் கொண்டுவந்ததில் மகிழ்ச்சி. அவரது முன்மாதிரியான வெற்றி வளரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.

தேவேந்திர ஜஜாரியா வாழ்த்து

தேவேந்திர ஜஜாரியா

தேவேந்திர ஜஜாரியாவின் அருமையான செயல்திறன், அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தேவேந்திர ஜஜாரியா இந்தியாவைத் தொடர்ந்து பெருமைப்படுத்திவருகிறார். அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்.

சுந்தர் சிங்கிற்கு வாழ்த்து

சுந்தர் சிங்

வெண்கலப் பதக்கம் வாங்கிக் கொடுத்த சுந்தர் சிங்கால், இந்தியாவே மகிழ்ச்சி அடைந்துள்ளது. அவர் குறிப்பிடத்தக்க துணிவையும் அர்ப்பணிப்பையும் காட்டியுள்ளார். வாழ்த்துகள்.

இதையும் படிங்க:பதக்கத்தை குவிக்கும் இந்தியா; ஈட்டி எறிதலில் இரட்டைப் பதக்கம்

ABOUT THE AUTHOR

...view details