தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து! - ராகுல் காந்தி

1956ஆம் ஆண்டு பல்வேறு மாகாணங்களில் இருந்து மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மாநிலங்கள் உருவாக்க தினம்
மாநிலங்கள் உருவாக்க தினம்

By

Published : Nov 1, 2021, 12:12 PM IST

Updated : Nov 1, 2021, 1:04 PM IST

டெல்லி: இந்தியா விடுதலை பெற்று குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டபோது, ஒன்பது மாநிலங்களும் மூன்று யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்தன.

எனினும், பின்னர் நாடு முழுவதும் வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது இந்தியா 14 மாநிலங்களாகவும், ஆறு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

மோடி ட்வீட்

அதன் பின்னரும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டாலும், 1956ஆம் ஆண்டுதான் முதல்முறையாக மாகாணங்களில் இருந்து மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மேலும், இந்த நாளை கேரளா, கர்நாடகா உள்பட ஆறு மாநிலங்கள் தங்கள் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாகக் கொண்டாடி வருகின்றன.

ஆந்திரா, கேரளா, கர்நாடகவுக்கு பிராந்திய மொழியிலும், ஆங்கிலத்திலும் வாழ்த்து

இந்நிலையில், ஹரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தி ட்வீட்

கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிங்களுக்கு அந்தந்த பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் ட்வீட் செய்துள்ள மோடி, ஹரியானா, மத்தியப் பிரதேம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு ஹிந்தி மொழியில் ட்வீட் செய்து வாழ்த்தியுள்ளார்.

அதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "ஆந்திரா, சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட நாளை ஒட்டி எனது வாழ்த்துகளை தெரவித்துக் கொள்கிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து

Last Updated : Nov 1, 2021, 1:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details