நாட்டின் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில், நூறு கிசான் ட்ரோன்கள் செயல்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
வேளாண்மையை 21ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்துடன் இணைத்து விவசாயிகளின் வாழ்வு மேம்படும் விதமாக இந்த ட்ரோன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன்கள் மூலம் வேளாண் நிலங்களில் பூச்சக்கொல்லி மருந்துகள் அடிக்கப்படும். நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.