டெல்லி:சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டளது. நாட்டின் பெருமை மிக்க இந்த தருணத்தில் இஸ்ரோ மற்றும் அங்கு பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து தனது 'X' ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், " மனித குலத்தின் நலனுக்காகவும், பிரபஞ்சம் தொடர்பான சிறந்த புரிதலை வளர்க்கும் நோக்கத்திலும் எங்களின் அயராத அறிவியல் தேடல் தொடரும்" எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில்தான் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நிலவின் தென் துருவத்தில் அதன் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான தகவல்களையும் இஸ்ரோ தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதன் தொடர்சியாக 15 ஆண்டுகால கனவு, முயற்ச்சி, தேடல் என்றெல்லாம் குறிப்பிடும் வகையில் உள்ள ஆதித்யா எல் -1 திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (செப்,2) காலை சரியாக 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்ணில் ஏவப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளே உற்று நோக்கிய இந்த நிகழ்வு இந்திய மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க:Somnath : பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்1 வெற்றிகரமாக பிரிந்தது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!