தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சோனியா காந்தியின் தாயார் மறைவு - பிரதமர் மோடி இரங்கல் - சோனியா காந்தியின் தாயார் மறைவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

By

Published : Aug 31, 2022, 10:41 PM IST

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ கடந்த 27ஆம் தேதி இத்தாலி நாட்டில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றுள்ளன.

இதை மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் ஊடகங்களில் இன்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி, சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி, ' தாயார் திருமதி பாவ்லா மைனோவின் மறைவுக்கு சோனியா காந்திக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். துக்கத்தின் இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் உங்களது முழு குடும்பத்துடன் இருக்கும்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பழங்குடியின வேலைக்காரப்பெண்ணை கொடூரமாக தாக்கிய பாஜக பெண் பிரமுகர் கைது

ABOUT THE AUTHOR

...view details