தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு! பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்! - Deeply shocked by terrorist attacks in Israel modi

இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும், தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி சமூக வலதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாலஸ்தீனம் - இஸ்ரேல்  இடையே தீவிரமாகும் போர்
பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 10:07 PM IST

புது டெல்லி:இஸ்ரேல் மீதான பாலஸ்தீனம் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் தாக்குதலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது X வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது, "இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த கடினமான நேரங்களில், இஸ்ரேல் மக்களின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் இந்தியா துணை நிற்கும். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இருக்கும்" என்று பதிவிட்டு இஸ்ரேலுக்கான ஆதரவை தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் எல்லைப் பிரச்சினை தற்போது மீண்டும் பூதாகரமாகி உள்ளது. காஸா நகரை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து இரு நாடுகளும் சண்டையிட்டுக் கொண்டு வருகின்றன. ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் கடந்த 5 நாட்களாக இஸ்ரேலியர்கள் இருந்துள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலிய ராணுவத்தினரும் இருந்துள்ளனர். வெளியேறச் சொல்லியும் வெளியேறாததால், பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மக்கள் மீது இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், காஸா முனையில் இருந்து இஸ்ரேல் மீது தொடர் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மேலும் இஸ்ரேலுக்கு எதிராக போரை துவக்கியுள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. "ஆப்ரேஷன் அல் அக்சா பிளட்" என்ற பெயரில் பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில் 5 ஆயிரம் ராக்கெட்களைக் கொண்டு இஸ்ரேலை பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் இஸ்ரேலைச் சேர்ந்த 22 பேர் உயிரழிந்துள்ள நிலையில், 545 பேர் காயம் அடைந்ததுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக பயங்கர ஆயுதங்களுடன் நீடித்த இந்த தாக்குதலில், 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், இந்த கொடூர தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 35 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்று உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் ராணுவ தளவாடங்களை கைப்பற்றுவது, காஸாவை கைபற்றுவது போன்ற வீடியோவை பயங்கரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ளது கூடுதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம், ஆப்ரேஷன் அயர்ன் ஸ்வார்ட்ஸ் என்ற பெயரில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக தனது தாக்கலை தொடங்கி உள்ளது. மேலும் போருக்கு தயாராக உள்ளதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைகாட்சி வடிவில் மக்களிடம் பேசியதாவது, "நாட்டின் ராணுவத்தை பெருமளவிற்கு ஒன்று திரட்டி, தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர்களுக்கு எதிராக போராட்டம் தொடரும். இது எந்த வித ஆப்ரேஷனும் இல்லை, எந்த முன்னோட்டமும் இல்லை.

நாம் இப்போது போர்க்களத்தில் உள்ளோம். போரில் நாம் வெல்வோம். எதிரிகள் அவர்கள் ஏற்படுத்தியதற்கான விளைவை கணிக்க முடியாத வகையில் பெறுவர். இதுவரையில் எதிரிகள் கண்டிராத வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும் என நான் வாக்களிக்கிறேன்" எனத் தெரிவித்தார். முன்னதாக இஸ்ரேல் ராணுவ படையினருடன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசிய கூட்டம் நடத்தினார். இந்தக்கூட்டத்தில் போருக்கான செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:தினை மாவுக்கு 5% ஜிஎஸ்டி... ஆல்கஹாலில் மாநில அரசுக்கு உரிமை..! - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ABOUT THE AUTHOR

...view details