தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏழைகளுக்கு 100% வீட்டுவசதி- மோடி அறிவிப்பு - கதி சக்தி

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

PM Modi
PM Modi

By

Published : Aug 15, 2021, 11:31 AM IST

Updated : Aug 15, 2021, 3:41 PM IST

டெல்லி:நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட்.15) தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, "நாட்டின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு ம்பாட்டிற்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டம் மூலம், நாட்டில் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால், நமது உள்ளூர் உற்பத்தியாளர்களின் பொருள்கள் உலகளவில், கொண்டு சேர்க்கப்படும். நாட்டின் வளர்ச்சியின் பாதையில், உற்பத்தி, ஏற்றுமதி இரண்டும் முக்கியமானது. இதனை அதிகரிக்கவே இந்தத் திட்டம்.

முன்னதாக நாம், உள்நாட்டிலேயே, விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை தயாரித்தோம். ககன்யான் திட்ட தொழில்நுட்பங்களும் நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதில் வெற்றி கண்டுள்ளோம்.

ஏழைகளுக்கு, சாலை வசதி, காப்பீடு வசதி உள்ளிட்டவைகள் கிடைக்கவேண்டும். மேலும், 100 விழுக்காடு வீட்டு வசதி கிடைக்கவேண்டும் " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:75ஆவது சுதந்திர தின விழா: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய பிரதமர்!

Last Updated : Aug 15, 2021, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details