டெல்லி: நமது எண்ணங்களில் வண்ணம் நிறைய உலகம் முழுவதும் ஹோலி பண்டிகை (HOLI FESTIVAL) மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் ஹோலி பண்டிகையை மிகப்பெரிய திருவிழாவைப் போல வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். மேலும் தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் மொத்த மொத்தமாக ஹோலியை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துச் சென்றுள்ளனர். வடமாநிலத்தில் அந்த அளவில் வெகு வெமர்சையாகவும், காலம் காலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் எல்லை பகுதியில் உள்ள BSF வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஹோலி பண்டிகையைப் பல வித வண்ண வண்ணப் பொடிகளைப் பூசி உற்சாகமாகக் கொண்டாடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பொதுவாக ஹோலி பண்டிகை வட இந்தியாவில் தான் மிகவும் பிரசித்தி பெற்றது என்றாலும் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர், ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுப் பகிர்ந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து, "ஹோலி வாழ்த்துக்கள், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்பொழுதும் உங்கள் வாழ்வில் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள்" எனத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.