டெல்லி:இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சரும், மலேசியாவின் முதல் வெளிநாடு வாழ் இந்திய சம்மான் விருது பெற்றவருமான எஸ்.சாமி வேலுவின் மறைவுவால் மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஓம் சாந்தி" எனப் பதிவிட்டுள்ளார்.
மலேசியாவின் முன்னாள் அமைச்சர் சாமி வேலுவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் - மலேசியாவின் முன்னாள் அமைச்சர் சாமி வேலு
மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சரும், முதலாவது வெளிநாடு வாழ் இந்திய சம்மான் விருது பெற்றவருமான எஸ். சாமி வேலுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Etv Bharat PM condoles the passing away Samy Vellu Former Cabinet Minister of Malaysia
சாமி வேலு மலேசியாவில் முக்கிய அரசியல் தலைவராக இருந்தவர். தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தியவர். மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர். கோலாலம்பூரில் உள்ள அவரது வீட்டிலேயே உயிர் பிரிந்துள்ளது. அவரது உடல் நாளை ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு, மாலை 4 மணிக்கு சேரஸில் உள்ள டி.பி.கே.எல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவருக்கு வயது 86.
இதையும் படிங்க:சர்வதேச கிரிக்கெட் நடுவர் அசாத் ரவூப் உயிரிழப்பு